Saturday, June 20, 2026

அப்பாவின் மௌன மொழி - A Father’s Unspoken Words


மௌனச் சிற்பி
மகனுக்கும் மகளுக்கும்
தன் வாழ்வைத் தந்தான்!

மறையாத தியாகம்—
அவன் இதய ஆழத்தில்
மறைத்து வைத்த அன்பு!

வார்த்தை இல்லா அன்பு
தன் கனவுகளை அழித்து,
எம் கனவுகளை விதைத்தான்!

அப்பா
சொல்லாமல் சுமக்கும் சுமை,
காட்டாமல் மறைக்கும் காயம்.

என்றும் இலைமறை காயாகவே...
அவர் இதயத்தின் ஆழத்தில்!

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்!

The silent craftsman—
Who built a life for us,
Giving everything to his children.

Unfading sacrifice
Love hidden deep
Within his heart!

Wordless love
He erased his own dreams
To sow seeds for ours!

Father...
A burden carried without a word,
A wound hidden without a sign.

Always like a fruit hidden by leaves...
Deep within his heart!

Happy Father's Day!


Saturday, May 16, 2026

An Unlived Life!

Driven by the longing for my homeland,
I crossed the oceans and arrived on foreign shores...
Watching the years quickly pass by,
I built a family and raised children of my own!
Leaving behind all my close kin—
In the grand scheme of things,
Almost forgetting them completely—
I kept searching
For whatever little was left of those relationships!
And yet, I have not lived
for my own desires!

இன்னும் வாழாத வாழ்க்கை!

ஊரின் ஆசையில்
ப்பாரின் வந்தேன். ...

வளரும் வயதை கண்டு
குடும்பம், குழந்தை கொண்டேன்!

சொந்தங்களை எல்லாம்
மொத்தத்தில்
மறந்து விட்டு
தேடினேன்
உறவுகளின் மிச்சத்தை!

இன்னும் வாழவில்லை
என்னுடைய ஆசைக்கு! 

Saturday, March 14, 2026

Welcome Spring 🌼🌱 🪻🌷🏵️ வசந்த காலமே வருக...

மலர்ந்தது மலர்கள் 
துளிர்த்தது பச்சை 
வந்தது வசந்தம் தென்றலோடு...
திறந்தது நம் இதயம்
வரவேற்போம் புண்ணகையோடு!

Flowers have bloomed
Green has sprouted fresh
Spring has arrived, bringing the gentle breeze…
Our hearts have opened wide
Let us welcome it with smiling faces!

Wednesday, January 14, 2026

Happy Thai Pongal! பொங்கலோ பொங்கல்! 2026

​தை பிறந்தால் வழி பிறக்கும்,

நாளும் நலம் சிறக்கும்!

பொங்கும் பொங்கலைப் போல,

உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும்

மகிழ்ச்சி பொங்கட்டும்!



Wednesday, December 31, 2025

Happy New Year 2026!☀️🌷

A seed of faith,  
penance in every drop of sweat.  
Across the wide land of the mind—  
here it blooms...  
the God of Time’s new blossom, 2026!

May every drop of sweat transform into divine joy and happiness🙏

நம்பிக்கை விதையாய்,
வியர்வை தவமாய்,
மனமெனும் புவியில்—
இதோ…
கால தேவனின் புதுமலர், 2026!

🌿 சிந்தும் ஒவ்வொரு வியர்வைத் துளியும்
உங்கள் மனமெனும் மண்ணில்
பேரின்ப மலர்களாய் மலரட்டும்!

🌞 உழைப்பின் சூடு
உள்ளத்தின் ஒளியாக மாறி
நாள்தோறும் புதிய ஆற்றலைத் தரட்டும்!

🙏 உங்கள் ஒவ்வொரு முயற்சியும்
வெற்றியாகி, உங்கள் மனதை
என்றும் மகிழ்ச்சியால் நிறைக்கட்டும்!


Wednesday, December 24, 2025

Marry Christmas 2025🎄🎁🦌✨🕊️

வானில் ஒரு விண்மீன்,  🌠
நட்சத்திரங்களின் புன்னகை, 🌌
மகிழ்ச்சியில் மக்கள் மனம்! 🥰
அமைதி பிறந்தது,  🕊️☮️ 
இதோ அன்பின் உதயம்! 🌄🫶✨
                                              ✍️ வெள்ளியங்கிரி 
A star in the sky, 🌠
The smile of the stars, 🌌 
Joyful hearts of the people! 🥰
Peace is born, 🕊️ ☮️ 
Here dawns love!🌄🫶✨
                                               ✍️ SilverHills