Wednesday, March 4, 2020

என் புதிய அம்மா! (My New MoM!)

எப்படி ஆரம்பிப்பது?
அவ்வளவாய் 
எழுதியது இல்லை 
இதுவரை.  
எனினும் ....

எனக்காக 
பிராத்தனை செய்த 
அத்தனை பேருக்கும் 
"நன்றி"!!!






எனக்கு தெரிந்திருக்கவில்லை
இதுதான் என் 
இறுதிநாள் என்று!

கடைசி குளியல் 
கடைசி பிராத்தனை 
கடைசி உணவு 
கடைசி தூக்கம்.....

எத்தனை பேருக்கு 
இந்த பேறு கிடைக்கும்?

பயப்பட வேண்டாம் 
நான் மீண்டும்
பிறக்க போகிறேன் !
நாளை 
இந்த உலகில் 
எந்தன் 
மறுபிறவி !

உங்களுக்கு
தெரிந்திருக்கவாய்ப்பில்லை 
தொலைந்து போன 
என்  
தாய், தந்தையர்  
திரும்ப கிடைத்துவிட்டனர் !

நீங்கள்
எனக்கு  மட்டுமல்ல 
என் போல் உள்ள 
எல்லோருக்கும் 
அம்மா, அப்பாக்களே !!!

ஒன்று மட்டும் 
சொல்ல ஆசை  
நீங்கள்தான்  
என் பெற்றோர் 
இன்னும் ஏழேழு  ஜென்மத்துக்கும் !!!







1 comment: