Tuesday, January 14, 2020

Pongalo Pongal! - பொங்கலோ பொங்கல் !


Pongalo Pongal!  -- பொங்கலோ பொங்கல் !


நான் நட்டு வைத்த 
நட்டுக்கல் சாமிக்கு 






பச்சரிசிப் பொங்கல் 
அன்று வெட்டியெடுத்த 
சாணத்து பிள்ளையாருக்கு 
தித்திக்கும் கரும்பு சள்ளை கொண்டு 

படையலிட்டு 





மஞ்சளிட்டு 
வாடாத அருங்கம்புல் வைத்து 
தோரணம்  கட்டி 




வாய்க்காலுக்கு 
வெள்ளையன்  காளையை  கூட்டி சென்று 
வைக்கோல் வைத்து 
தேய்த்து குளிப்பாட்டி 





வயிருநம்ப புண்ணாக்கும் 
புது தவிடும் கொடுத்து 
வண்ண மலர் மாலை சூடி 

இன்றும் நடக்கிறது 
பொங்கல்
எங்கள் வீட்டில் !!!






எங்கும் செல்ல வேண்டாம் 
இறைவனைத்தேடி 
எங்கும் நிறைந்துள்ளான் 

ஆம் 

உனக்கு உதவும்  
ஒவ்வொரு  உயிரிலும்  பொருளிலும்
ஒளிந்துள்ளான்!

ஏன் உனக்குள்ளும்தான் !!!

உதவியவ(வை)ர்கெல்லாம் 
நன்றி சொல்லி 
உண்ண 
உணவளிக்கும்
உழவனையும் 
அவனுக்கு உதவும் உயிர்களையும் 
வாழ்த்தி வணங்குவோம் வாரீர் !!!

No comments:

Post a Comment